7வது ஊதிய குறைபாடுகளை கண்டித்து போராட்டம் நடத்திட மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இது வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல ! உங்களின் உணர்வு !
இது வெறும் போராட்டமல்ல ! உங்களின் வாழ்வு !
எவரும் இந்த செய்தி தெரியவில்லை என்று கூறக் கூடாது . தெரிந்தவர்கள் இந்த செய்தியை உடனே அடுத்த தோழருக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் பகிரவும் .
பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் !
முழங்கட்டும் ! உரிமை முழக்கம் முழங்கட்டும் !
எட்டட்டும் 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல்
மத்திய அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !
இன்றில்லையேல் இனி அடுத்த பத்து ஆண்டுகளோ ?
அல்லது அதுவும் இல்லையோ ? எவருக்கும் தெரியாது .
தமிழகமெங்கும்
(சென்னை பெருநகர கோட்டங்கள் உட்பட )
1. எதிர் வரும் 27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும் கருப்பு சின்னம் அணிந்து மத்திய அரசுக்கு நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகிறோம்.
2. அதே நாளில் அந்தந்த தலைமை அஞ்சலக வாயிலில் மற்றும் கோட்ட அலுவலக வாயிலில் உணவு இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில் 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் ஊதிய உயர்வு வெறும் 14.29% மட்டுமே . அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி மேலும் செலவு என்று ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்யப்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும் கேவலமான அரசியல் அன்றி வேறு எதுவுமாக இருக்க முடியாது.
உதாரணத்திற்கு சாதாரண கடை நிலை ஊழியரின் ஊதியம் குறித்து பார்த்தாலே இது தெளிவாகப் புரியும் .
தற்போது MTS ஊழியர் வாங்கும் ஆரம்ப நிலை சம்பளம் : ரூ. 7000/-
1.1.2016 முதல் வழங்க வேண்டிய D .A . 125% : ரூ. 8750/-
ஆக 1.1.2016 இல் பெறும் மொத்த ஊதியம் : ரூ.15750/-
தற்போது ஊதியக் குழு 125% D.A. சேர்த்து நிர்ணயித்துள்ள
ஆரம்ப நிலை அடிப்படை ஊதியம் : ரூ.18000/-
======================================================================
இரண்டிற்கும் வித்தியாசமான ஊதிய உயர்வு : ரூ. 2250/- மட்டும்.

ஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய
NPS CONTRIBUTION 10% : ரூ. 1800/-
தற்போதைய திட்டப்படி அவர் கட்டவேண்டிய
CGEGIS PREMIUM தொகை : ரூ. 1500/-
(இரண்டு தொகைகளுமே அரசிடம்தான் செல்லும் .
உடனே ஊழியருக்கு திரும்ப வராது . )
மொத்தம் அவர் உடனடியாக கட்டவேண்டிய தொகை : ரூ. 3300/-
உயர்த்தப் பட்டது ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE HOME PAY என்னவாகும் ? HRA யும் குறைக்கப்பட்டு விட்டது. TPA மட்டும் பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால் உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது எவ்வளவு ?
இது போலத்தான் ஒவ்வொரு ஊழியருக்கும். நிலைமை இதுவெனில் , அரசுக்கு ஒரு லட்சம் கோடி உடனடியாக எப்படி செலவாகும்.? இதுபோல பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தத்தில் ஊதியக் குழு என்ற போர்வையில் மத்திய அரசு , தனது ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக