SAPOST

"

தூத்துக்குடி கோட்டம்

NFPE -தூத்துக்குடி கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களுக்கு வேண்டுகோள்:


கோட்ட சங்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்………….


email ID : nfpetn@gmail.com

திங்கள், 3 மார்ச், 2014

திட்டங்களும் சட்டங்களும்

"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி   எங்கெங்கோ அலைகிறார் ஞான தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே!"  என்று உள்ளத்தின் உள்ளே  கடவுளை வெளியில் தேடும் மனிதர்களை பற்றிய  பாடல் ஓன்று உண்டு. அதை போலே சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும் நமது இலாகாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டிய அரசும், நிர்வாகமும், சிறப்பாக நடத்தும் வழி தெரியாமல்,  அதை சீரழிக்கும் வகையில் பல செயல்களை செய்து வருகிறது. புலியை பார்த்து பூணை சூடு போட்டு கொண்ட கதையாய், CBSஎன்றும் , NETWORKING என்றும் புதிய திட்டங்கள் கொண்டுவர படுகின்றன.  இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பதற்கு ஆசை பட்டு இருப்பதையும் இழந்த கதையாய் ஏதேதோ மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இருக்கின்ற சேவையை சிறப்பாக  செய்து வந்தாலே வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவார்கள். ஆனால், ஆட்களை குறைத்து விட்டு, L1, L2 என்று தபால் பட்டுவாடவை தாமதப்படுத்தி கொண்டு தினம் ஒரு பார்சல், ஒரு RPLI , ஒரு SB,  ஒரு epost,  என்று புதிது புதிதாக திட்டங்களை கொண்டு வந்து ஏற்கனவே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஊழியர்களை மேலும் வதைத்து கொண்டு இருக்கிறார்கள். TORTURE-குறைந்தாலே  எல்லோரும்  சிறப்பாக செயல்படுவார்கள் என்பதுதான் தொழிற்சங்கத்தின் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக